சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்படை விட 2-4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்ககூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் இன்றும், நாளையும், மாலை/இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
+
Advertisement

