தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதுல பூ சுத்துறாரு... தங்கம் விக்கிற விலையில விஜய் ஒரு பவுன் தருவாராம்: தவாக வேல்முருகன் கலாய்

 

Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் தவாக தலைவர் வேல்முருகன் பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், பாஜவுடன், தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வருகிறதே? என்றனர். அதற்கு பதிலளித்த வேல்முருகன், விஜய் எந்த மதவாதத்திற்கு எதிராக கட்சி தொடங்கினாரோ? அதே கட்சியுடன் கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள். கருத்து சொல்லக்கூடிய அளவுக்கு தவெக தேர்தல் வாக்குறுதிகள் வொர்த் இல்லை. விஜய் ஆந்திரா, தமிழ்நாடு ஏனைய மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநில முதலமைச்சர்கள், கட்சி தலைவர்கள் கொடுத்த தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி வெளியிடுகிறார். இன்னும் சொல்லப்போனால் அவர் சொல்லக்கூடிய திட்டங்கள் ஆண்டு ஆண்டுகாலமாக இந்த மண்ணில் நடந்தேறி வருகின்ற திட்டங்கள். இந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறதா? இல்லையா? என்ற அடிப்படை புரிதல்கூட அவருக்கு இல்லாததைதான் இது காட்டுகிறது.

பல மாநிலங்களை தனதாக்கி கொள்வது, முதலமைச்சர்களை தனதாக்கி கொள்வது, சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை பயன்படுத்தி மிரட்டுவது, அடிபணியாதவர்களை சிறையில் அடைப்பது, பொய் வழக்கு போடுவதுதான் பாரதிய ஜனதா. மதத்தின் பெயரால் மக்களை அணி திரட்டுகின்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். திமுக இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது. ஆனால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள்தான் நடிகர் விஜயின் வாக்குறுதிகள். இன்று ஒரு பவுன் ஒன்றரை லட்சம் ரூபாய். எப்படி ஒவ்வொரு திருமணமாகும் மணமகளுக்கும் கொடுக்க முடியும். சாத்தியமே இல்லை. அதேபோல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் எப்படி அரை பவுன் தங்கம் கொடுக்க முடியும்? இதெல்லாம் காதில் பூ சுற்றுகிற வேலை.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement

Related News