Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வயநாடு நிலச்சரிவு குறித்த செய்தியால் மிகுந்த மனவேதனை - ராகுல் காந்தி இரங்கல்

வயநாடு: கேரளாவின் வயநாட்டில் சுரங்கப்பாதை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது.

வயநாட்டில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு தொடர்பான் வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்கலில் ஒருவரான ராகுல் காந்தி, இந்த சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தனது எக்ஸ் பதிவில், 'வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்த செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவரும் என் சிந்தனையிலும் பிரார்த்தனையிலும் உள்ளனர்.

தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன; இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கட்டான இச்சூழ்நிலையில், அனைத்து காங்கிரஸ் மற்றும் யுடிஎஃப் (UDF) தொண்டர்களும் தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டும்" என்று கேட்டு கொண்டுள்ளார். மேலும் எதிர்கொள்ள முடியாத சவால்களைக் கூட வயநாடு முன்பு மன உறுதியுடன் எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளது; இந்தத் துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துடனும் நாம் அனைவரும் உறுதுணையாக நிற்போம் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு முக்கிய காண்கிற தலைவரான பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பதிவில், இந்த நிலச்சரிவில் தங்கள் குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தில் நாங்கள் உங்களுக்குத் துணையாக இருப்போம், மேலும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவோம். இன்னும் கண்டறியப்படாதவர்கள் மீட்கப்படும் வரை மன உறுதியுடன் இருக்கவும், அவர்களுக்காகக் காத்திருக்கும் அன்புக்குரியவர்கள் இந்த வேதனையான தருணத்தில் தைரியத்தைக் கடைப்பிடிக்க பிரார்த்திக்கிறோம் என கூறி உள்ளார்.