டெல்லி போலீசாரால் தேடப்பட்ட கார் சிக்கியது
Advertisement
சண்டிகர்: டெல்லி காவல்துறையால் தீவிரமாக தேடப்பட்டு வந்த மற்றொரு கார் ஹரியானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி பதிவு எண் கொண்ட சிவப்பு நிற ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் காரை ஹரியானாவில் போலீஸ் கண்டுபிடித்தது. ஹரியானா மாநிலம் கந்தவாலியில் பூங்கா அருகே நிறுத்தப்பட்டிருந்த காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். DL 10 CK 0458 என்ற பதிவு எண் கொண்ட காரை கந்தவாலி கிராமத்தில் ஃபரீதாபாத் போலீஸ் கைப்பற்றியது. ஹூண்டாய் ஐ20 தவிர மற்றொரு காரை வெடிக்க வைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக போலீஸ் தகவல் தெரிவித்தது. டெல்லி காவல்துறையின் 5 குழுக்கள் சிவப்பு நிற ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் காரை தேடி வந்த நிலையில் சிக்கியது
Advertisement