மாருதி சுசூகி நிறுவனம், வேகன் ஆர் பிளக்ஸ் பியூயல் காரை காட்சிப்படுத்தியுள்ளது. இதில் எத்தனால் 85 சதவீதம் கலந்த பெட்ரோலையும் பயன்படுத்த முடியும். இந்தியாவில் தற்போது பெரும்பாலும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் தான் விற்பனை செய்யப்படுகிறது. ஒன்றிய அரசு சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் வகையில் வாகனங்களை உற்பத்தி செய்ய ஊக்குவித்து வருகிறது. 2027ம் ஆண்டுக்குள் அரசு இலக்கான 85 சதவீத எத்தனால் கலப்பு விகிதம் இருந்தால் அதற்கேற்ப எதிர்காலத்தில் 85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தக்கூடிய பிளக்ஸ் பியூயல் கார்களுக்கான சந்தை உருவாகும். இதனை கருத்தில் கொண்டே இத்தகைய காரை மாருதி சுசூகி நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. இதன் தொழில்நுட்ப விவரங்களை மாருதி நிறுவனம் வெளிப்படுத்தவில்லை.
+
Advertisement


