தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுவை பாஜ தலைவராக வி.பி. ராமலிங்கம் தேர்வு: இன்று பதவியேற்பு

Advertisement

புதுச்சேரி: புதுச்சேரி பாஜ மாநில தலைவராக வி.பி. ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முறைப்படி இன்று அவர் பொறுப்பேற்றுக்கொள்கிறார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாஜவுக்கு மாநில நிர்வாகிகள், தலைவர்கள் கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி புதுச்சேரியில் புதிய பாஜ தலைவரை தேர்வு செய்வதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரை இந்திராகாந்தி சிலை அருகே உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நடந்தது. காலை 11.23 மணிக்கு தேர்தல் அதிகாரி அகிலன், இணை அதிகாரி வெற்றிச்செல்வம் ஆகியோரிடம் தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை முன்னாள் எம்எல்ஏ வி.பி ராமலிங்கம் தாக்கல் செய்தார். அப்போது மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, தற்போது பாஜ தலைவராக உள்ள செல்வகணபதி எம்பி, அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், மாஜி அமைச்சர் சாய். ஜெ.சரவணன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

அதேபோல் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு செல்வகணபதி எம்பி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மனுத்தாக்கல் தாக்கல் செய்தனர். பகல் 12 மணி வரை வி.பி ராமலிங்கத்தை தவிர்த்து, வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் வி.பி. ராமலிங்கம் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து தேர்தல் அதிகாரி அகிலன் கூறுகையில், வி.பி ராமலிங்கம் தாக்கல் செய்த வேட்பு மனு சரியான பரிந்துரைகளுடன் இருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கான முறையான அறிவிப்பு நாளை (இன்று) வெளியாகும், என்றார். இதற்கிடையே இன்று மதியம் 12 மணிக்கு மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் தேசிய பொது செயலாளர் தருண்சோக் முன்னிலையில் வி.பி. ராமலிங்கம் தலைவர் பதவியை ஏற்கவுள்ளார். 2021ம் ஆண்டு பாஜவில் இணைந்த வி.பி ராமலிங்கத்துக்கு, நியமன எம்எல்ஏ பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து தற்போது, மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement