Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்காளர் தீவிர திருத்த பணி விவகாரத்தில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நீதி கதறுகிறது: உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்‌ஷி மற்றும் வி.எம்.பஞ்சோலி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் மம்தா பானர்ஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள்,\ ஆவணங்களில் உள்ள பெயர்கள் பொருந்தவில்லை என ஏராளமானோர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் சிறிய மாற்றம் இருந்தது எனக்கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என தெரிவித்தார்.

இதையடுத்து மேற்கு வங்க அரசு தரப்பில் ஆஜரான அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி,‘‘மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் எனக்கு நீங்கள் வழங்கியுள்ள இந்த வாய்ப்புக்கு நன்றி உள்ளவளாக இருப்பேன். எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் மூடிய கதவுக்கு பின்னால் நீதி சிக்கி கதறிக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு எங்குமே நீதி கிடைக்கவில்லை என்று வேதனை அடைகிறோம். உதாரணத்திற்கு என்னுடைய அடையாள அட்டை புகைப்படத்தை இந்த நீதிமன்றத்தில் காட்டுகிறேன். அது உண்மையில் என்னுடைய புகைப்படமே கிடையாது.

மாறாக அது ஒரு செய்தி தாளில் இருந்து தேர்தல் ஆணையம் எடுத்து பயன்படுத்தி உள்ளது. படிக்க சென்ற பல மாணவர்களுக்கு முறையான வாய்ப்பு வழங்கப்படாமல் உள்ளது. வேலைக்காக சென்றவர்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் மேற்குவங்க மாநிலம் குறிவைக்கப்படுகிறது. அசாம் மாநிலத்தில் இப்படியான ஒரு நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்யவில்லையே.

திருமணம் செய்து சென்ற பெண்கள் தந்தை பெயரை நீக்கி விட்டு கணவர் பெயரை சேர்த்து வழங்கினால், அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படுகின்றனர். ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்க மறுக்கின்றனர்.  குறிப்பாக இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட வேண்டிய இதுபோன்ற முக்கிய பணிகள் ஏன் இரண்டே மாதங்களில் நடத்தப்படுகிறது. என தெரிவித்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.