Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை - இரு அவைகளிலும் ஜனநாயக கட்சி முன்னிலை

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இரு அவைகளிலும் ஜனநாயக கட்சி முன்னிலையில் உள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்திற்கான இடைக்கால தேர்தல் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தகவல்கள் அடிப்படையில் ஜனநாயகக் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

செனட் சபையில் பெரும்பான்மைக்கு தேவையான 50 இடங்களில் 43 இடங்களில் ஜனநாயக கட்சி முன்னிலையில் உள்ளது, பிரதிநிதிகள் சபை தேர்தலில் ஜனநாயக கட்சி 45 இடங்களிலும் குடியரசுக் கட்சி 20 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை இடைத்தேர்தலில் 32 இடங்களில் ட்ரம்பின் குடியரசு கட்சி முன்னிலையில் உள்ளது.