Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்கு திருட்டு புகார் எடுபடவில்லை; பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு 2வது மோசமான தோல்வி

பீகார் தேர்தல் வரலாற்றில் காங்கிரஸ் கட்சி தனது இரண்டாவது மோசமான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. மொத்தம் 61 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பெரும்பாலான இடங்களில் டெபாசிட் தொகையை கூட காங்கிரஸ் இழந்தது. சிராக் பாஸ்வான் கட்சி கூட 19 இடங்களை பிடித்து சாதித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கடுமையாக சறுக்கி உள்ளது.

காங்கிரஸ் வரலாற்றில் மிகவும் மோசமாக பீகார் தேர்தலில் கடந்த 2010ல் 4 இடங்களில் மட்டுமே வென்றது. 15 ஆண்டுகள் கழித்து 6 இடங்களை பிடித்து மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது. பீகாரில் 1985 வரை 100க்கும் மேற்பட்ட இடங்களை வென்று ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் அதிவேகமாக தனது பிடியை பீகாரில் இழந்துள்ளது. ராகுல்காந்தியின் வாக்கு திருட்டு புகார் அங்கு எடுபடவில்லை. அங்கு அவர் 15 நாள் யாத்திரை நடத்தினார். அந்த யாத்திரை நடந்த இடங்களில் கூட காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது.

  • 1952 ஆம் ஆண்டில் 41.38 சதவீத வாக்குகளோடு 239 இடங்களை பிடித்தது.
  • 1985ல் 196 இடங்களிலிருந்து 1990ல் 71 ஆகவும், 1995ல் 29, 2000ஆம் ஆண்டில் 23 ஆகவும் சரிந்து.
  • 2005ல் 9 என்ற ஒற்றை இலக்கத்தை எட்டியது.