Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

போக்ஸ் வேகன் டைரான் ஆர்-லைன்

போக்ஸ்வேகன் நிறுவனம், டைரான் ஆர்-லைன் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 204 எச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இதே இன்ஜின் தான் டிகுவான் ஆர்-லைனில் இடம் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக மணிக்கு 224 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். 100 கிலோ மீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டும். 19 அங்குல அலாய் வீல்கள், 15 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 3 மண்டல கிளைமேட் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூப், வயர்லெஸ் சார்ஜர், 12 வகை மெமரியுடன் கூடிய மசாஜ் வசதி கொண்ட முன்புற சீட்கள், 11 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மென் கார்டன் சவுண்ட் சிஸ்டம், பவர்டு டெயில் கேட்கள், 30 வண்ண ஆம்பியன்ட் லைட்டிங், 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், லெவல் 2 அடாஸ், ஹில் ஸ்டார்ட் மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட், மேட்ரிக்ஸ் எல்இடி லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக சுமார் ரூ.46.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.