Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

போக்ஸ்வேகன் டாய்குன் பேஸ்லிப்ட்

போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், புதிய டாய்குன் பேஸ்லிப்ட் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.0 டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 115 எச்பி பவரையும், 178 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் வேரியண்டிலும் கிடைக்கும். இது அதிகபட்சமாக 150 எச்பி பவரையும், 150 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் முக்கிய மாற்றமாக, 1.0 இன்ஜினில் புதிய 8 ஸ்பீடு டார்க்யூ கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. முன்பு 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மட்டுமே இருந்தது. 1.5 லிட்டர் இன்ஜினில் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. இந்தக் காரில் ஒளிரும் விடபிள்யூ பேட்ச், எல்இடி ஹெட்லாம்ப்கள் இடம் பெற்றுள்ளன. கிரில் முன்பை விட மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பனோரமிக் சன்ரூப், கிளைமேட் கண்ட்ரோல், 10.1 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம் , 10.25 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, வென்டிலேட் முன்புற சீட்கள், 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஹில்ஹோல்ட் அசிஸ்ட் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. வேரியண்டுக்கு ஏற்ப ரூ.11,000 முதல் ரூ.50,000 வரை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். விலை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.