Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விசா கொள்கையில் மாற்றங்கள் வெளிநாட்டு மாணவர்கள் செப்.15க்கு முன் நாடு திரும்ப வேண்டும்: அமெரிக்க பல்கலை உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சர்வதேச மாணவர்களுக்கான எப்-1 விசா விதிகளில் மிக முக்கியமான திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது, இது செப்டம்பர் 15 முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது. பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த ‘டியூரேஷன் ஆப் ஸ்டேட்டஸ்(டிஎஸ்) முறைக்கு பதிலாக, நிர்ணயிக்கப்பட்ட கால அளவு கொண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

புதிய திட்டத்தின்படி சர்வதேச மாணவர்கள் இனி அதிகபட்சமாக 4 ஆண்டுகள் மட்டுமே அமெரிக்காவில் தங்கி படிக்க அனுமதிக்கப்படுவர்.பிஎச்டி அல்லது 4 ஆண்டுகளுக்கு மேலான உயர்கல்வி மற்றும் ஸ்டெம் படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள், தங்களின் தங்கும் காலத்தை நீட்டிக்க அமெரிக்க அரசிடம் தனியாக அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

படிப்பை முடித்த பிறகு, வேலை தேட அல்லது தாயகம் திரும்ப 30 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு மாணவர்கள் குறிப்பாக இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,புதிய விதி அமலுக்கு வருவதற்கு முன்னர், சர்வதேச மாணவர்கள் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவிற்குள் வரவேண்டும் என பல பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தியுள்ளன.