சென்னை: போலி ஆவணங்களைத் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர்கள் இருவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் ஆய்வாளர்களான முனிசேகர், ராஜேஷ் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நில அபகரிப்பு முயற்சி தொடர்பான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


