விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்தில் 3 பேர் பலி
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் தொழிலாளிகள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளர்கள் மேலும் பலர் சிக்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement