கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி!
இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி ஆசியக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பாக விளையாடி வலுவான ரன்களை குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியால் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலக்கை எட்ட முடியவில்லை. இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி 8-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. தொடரில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டைப் பாராட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய வீராங்கனைகளின் ஆட்டத் திறன், தன்னம்பிக்கை மற்றும் அணியாக செயல்பட்ட விதம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இந்த வெற்றி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெற்றி பெற்ற மகளிர் அணிக்கு நாடு முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
கலக்கும் 80ஸ் டிரெண்ட்!
இன்ஸ்டாகிராமில் கடந்த வாரம் முழுக்க 80களின் காலத்தை நினைவு படுத்தும் ரெட்ரோ புகைப்படங்கள் வைரலாகிவந்தன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தற்போதைய புகைப்படங்களை 80ஸ் காலத்து தோற்றத்திற்கு மாற்றி நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அந்தக் காலத்து உடைகள், சிகை அலங்காரம், புகைப்பட பாணி என அனைத்தும் அப்படியே இடம்பெறுவதால் இந்த டிரெண்ட் பலரையும் கவர்ந்துள்ளது. திரைப்பிரபலங்களும் இதில் இணைந்துள்ளனர். ப்ரீத்தி முகுந்தன், அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங் களின் ரெட்ரோ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. மேலும் உண்மையாகவே 80களின் நடிகர்கள், நடிகைகள் அவர்களின் உண்மையான புகைப் படங்களையும் பதிவிட படு வைரலானது. பிரபலங்களைத் தொடர்ந்து கிரிக்கெட் அணிகள் மற்றும் அரசியல் பிரபலங்களும் 80ஸ் பாணியில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இதனால் இன்ஸ்டாகிராமில் மீண்டும் 80களின் காலம் திரும்பி வந்தது போன்ற சூழல் உருவாகி எங்கும் வைரலாகிவந்தது.


