விதிமுறை மீறி பைக் பேரணி தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
கோபி: விதிமுறை மீறி பைக் பேரணி நடத்திய தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்தார். அவர் தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைவதற்காக நேற்று இரு சக்கர வாகனங்களில் கோபி-கடத்தூர் சாலையில் பேரணியாக வந்தனர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அதிவேகமாக சென்றதாக அளுக்குளியை சேர்ந்த பாண்டு ரங்கசாமி, கோபி அருகே கூகலூரில் வெடிபொருட்களை அஜாக்கிரதையாக கையாண்டு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்றதாக தவெக ஒன்றிய செயலாளர் நவீன்குமார் ஆகியோர் மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Advertisement
Advertisement