வின்பாஸ்ட் நிறுவனம் விஎப் எம்பிவி 7 என்ற 7 சீட்டர் கொண்ட பிரீமியம் எலெக்ட்ரிக் காரை இந்தியச் சந்தைக்காக வடிவமைத்துள்ளது. இந்த காருக்கான முன்பதிவு தொடங்கி விட்டதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வின்பாஸ்ட் இணையதளத்திலும், அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடமும் ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தக் காரில் உள்ள கேபினில் அதிக இட வசதி உள்ளது. ஆர்19 அலாய் வீல்கள் உள்ளன. 60.13 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் செல்லலாம் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தக் கார் இந்த மாதம் 15ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அப்போது விலை விவரங்கள் வெளியிடப்படும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ள. வின்பாஸ்ட் நிறுவனம் இதற்கு முன்பு விஎப் 6 மற்றும் விஎப்7 ஆகிய கார்களை அறிமுகம் செய்திருந்தது.
+
Advertisement
