வின்பாஸ்ட் நிறுவனம் விஎப் 6 மற்றும் விஎப்7 ஆகியவற்றை தொடர்ந்து விஎப் எம்பிவி 7 என்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 60.1 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 517 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். இதில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 100 கிலோ மீட்டர் வேகத்தை 9 நொடிகளுக்குள் எட்டும். எல்இடி லைட்டுகள், 19 அங்குல அலாய் வீல்கள், ஸ்பிளிட் சீட், 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மூன்று வரிசை சீட்களுக்கும் ஏசி வெண்ட்கள் மற்றும் டைப் சி சார்ஜிங் போர்ட், எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என 3 டிரைவிங் மோட்கள், ஏர் பியூரிபையர், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், 6 ஏர்பேக்குகள் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. வேரியண்டுகளுக்கு ஏற்ப சில அம்சங்கள் மாறுபடலாம். துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.24.49 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement

