சென்னை: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு; பல வகை பூக்களின் விலை கிலோ ரூ.350 வரை அதிகரித்துள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ.2,000, கனகாம்பரம் ரூ.1,000, சம்பங்கி ரூ.900, முல்லைப்பூ ரூ.800க்கு விற்பனை ஆகிறது. அதிகளவில் லாரிகள் வரும் எனத் தெரிந்தும் அதிகாரிகள் போதிய ஏற்பாடு செய்யாததால், நள்ளிரவு 2 மணிக்கு வர இருந்த லோடுகள், காலை 6 மணிக்கு வந்துள்ளதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
+
Advertisement

