தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழுப்புரம் அருகே பரபரப்பு நகை வியாபாரியின் கார், பைக்குகளை நள்ளிரவில் தீ வைத்து எரித்த கும்பல்

Advertisement

* சிசிடிவி கேமராவை உடைத்து தப்பினர்

* முன்விரோதம் காரணமா என விசாரணை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே நகை தொழிலாளியின் கார், பைக்குகள் தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் அருகே டி.மேட்டுபாளையத்தை சேர்ந்தவர் வீரப்பன் மகன்கள் மோகன்ராஜ், குமாரசாமி, மொத்தமாக நகை வாங்கி வந்து வடிவமைத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான கார், 2 பைக்குகளை வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துள்ளார். இதனிடையே நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கார் மற்றும் இரண்டு பைக்குகளும் கொழுந்துவிட்டு தீப்பிடித்து எரிந்தது.

தீவெளிச்சத்தை பார்த்த மோகன்ராஜ் குடும்பத்தினர் வெளியே அலறியடித்து ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்தபோதும் தீயில் கார், இரண்டு பைக்குகளும் எரிந்து முற்றிலும் சேதமானது.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கார், பைக்கை தீ வைத்து எரித்த கும்பல் மோகன்ராஜ் வீட்டு முன்பிருந்த சிசிடிவி கேமிராவை உடைத்துவிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி இந்த கார், பைக்கை தீவைத்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

தொடர்ந்து கைரேகை, தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு அங்கும், இங்குமாக ஓடியது. தொடர்ந்து போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மோகன்ராஜ் குடும்பத்துக்கு சிலருடன் பிரச்னை இருந்து வந்ததாகவும் அந்த முன்விரோதத்தில் இந்த கார், பைக்குகளை தீவைத்து எரித்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதுபோன்று கடந்த 2022ம் ஆண்டு இவர்களுடைய கார் வீட்டுவாசலில் நிறுத்தியபோது தீவைக்கப்பட்டதில் காரின் டயர்கள் எரிந்து சாம்பலானது. தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News