1. ஆபீஸ் அசிஸ்டென்ட்: (பல்நோக்கு பணிகள்): வயது: 18 முதல் 28க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழிகளில் பேச தெரிந்திருக்க வேண்டும்.
2. ஆபீசர் ஸ்கேல்-1 (அசிஸ்டென்ட் மேனேஜர்): 18 முதல் 30க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழகளில் பேச தெரிந்திருக்க வேண்டும்.
3. ஆபீசர் ஸ்கேல்-2 (ஸ்பெஷலிஸ்ட் மேனேஜர்): வயது வரம்பு: 21 லிருந்து 32க்குள் இருக்க வேண்டும். தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/கம்யூனிகேசன்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. ஆபீசர் ஸ்கேல்- 2 (ஜெனரல் பேங்கிங்): வயது வரம்பு; 21 லிருந்து 32க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது வேளாண்மை/தோட்டக்கலைத்துறை/ டெய்ரி/ அனிமல் ஹஸ்பெண்டரி/பாரஸ்டரி/ கால்நடை அறிவியல்/ அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங்/ மீன் வளர்ப்பியல் ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்புடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. ஆபீசர் ஸ்கேல்-3 (சீனியர் மேனேஜர்): வயது: 21 முதல் 40க்குள். தகுதி: 50% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பேங்கிங்/பைனான்ஸ்/மார்க்கெட்டிங்/வேளாண்மை/தோட்டக்கலை/வனவியல்/ அனிமல் ஹஸ்பண்டரி/ கால்நடை அறிவியல்/அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங்/ மீன்வளர்ப்பியல்/ வேளாண்மை மார்க்கெட்டிங் மற்றும் கூட்டுறவு/ இன்பர்மேஷன் டெக்னாலஜி/மேலாண்மை/ சட்டம்/ பொருளியல்/ அக்கவுன்டென்சி ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்றிருப்பது, விரும்பத்தக்கது.
வயது வரம்பு சலுகை: வயது வரம்பானது 1.9.2025 தேதியின்படி கணக்கிடப்படும். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், விதவைகள்/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் தளர்வு அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
ஆபீஸ் அசிஸ்டென்ட் பணிக்கு ஆன்னை் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆபீசர் (ஸ்கேல்-1) பணிக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆபீசர்- ஸ்கேல்-2/3 பணிகளுக்கு ஒரு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆபீசர் ஸ்கேல்-1 மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட் பணிகளுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வானது முதல்நிலை (பிரிலிமினரி) தேர்வு, பிரதான (மெயின்) தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும்.
பிரிலிமினரி, மெயின் எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், நேரம் மற்றும் மதிப்பெண்கள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. வங்கி வாரியாக காலியிட விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரிலிமினரி தேர்வு சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர், புதுச்சேரி ஆகிய மையங்களில் நடைபெறும்.
மெயின் தேர்வு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய மையங்களில் நடைபெறும்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.850/-. இதர பிரிவினருக்கு ரூ.175/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.09.2025.



