சென்னை நோக்கி அதிக அளவில் வாகனங்கள் வருவதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறப்பு
தீபாவளியையொட்டி வந்த தொடர் விடுமுறை முடிந்ததால் தென் மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னைக்கு புறப்பட்டனர். இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை ஆயிரக் கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.


