தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விக்கிரவாண்டி அருகே ரூ.1 கோடி பறிமுதல்: டாக்டர் காரில் சிக்கியது

Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தை தடுக்க பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல மாவட்ட எல்லைப் பகுதி மற்றும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் துணை ராணுவ பாதுகாப்புடன் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று விழுப்புரம் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையான மழவந்தாங்கள் பகுதி சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது காரிலிருந்த 2 சூட்கேசில் ரூ.1 கோடி பணம் இருந்தது இருந்தது தெரியவந்தது. சாரணையில் காரில் வந்தவர், சென்னையைச் சேர்ந்த டாக்டர் மதனகோபால் என்பதும் தெரியவந்தது. ஆனால் அவரிடம் ரூ.1 கோடிக்கான ஆவணங்கள் இல்லை. இதனால் ரூ.1 கோடி போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து மதனகோபால் கூறுகையில், ‘எங்களுக்கு பூர்வீக சொத்து திருச்சியில் உள்ளது. அதனை விற்பனை செய்துவிட்டு என்னுடைய பங்கு ரூ.1 கோடி பணத்தை எடுத்துக்கொண்டு வந்தோம். சென்னைக்கு செல்லும் வழியில் திருவண்ணாமலை கோயிலுக்கு செல்வதற்காக விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்றோம். அப்போது கண்டாச்சிபுரம் பகுதியில் வழி தெரியாமல் திருக்கோவிலூர் சாலையில் சென்று திரும்பவும் வரும்போது வாகன சோதனையில் மடக்கி நிறுத்தினார்கள். சொத்து விற்பனை செய்தற்கான ஆவணங்களும், பணம் பெற்றதற்கான ஆவணங்களும் இருக்கின்றன. அதனை கொண்டு வந்து காண்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்வோம்’ என்றார்.

Advertisement