நடிகர் அனுமோகனிடம், ‘விஜய் அரசியலுக்கு வருகிறார். தமிழ்நாட்டில் பொலிட்டிக்கலாக என்ன மாற்றம் நடக்கும்?’ என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு பதிலளித்த அனுமோகன், ‘நிச்சயமாக ஒரு மாற்றம் நடக்கும். ஆனால், நீங்கள் நினைப்பது எதுவும் நடக்காது.
தற்போது எந்த பத்திரிகையை எடுத்தாலும், எந்த யூடியூப் சேனலை பார்த்தாலும் ஒருத்தரையே சலாம் போட்டு பேசிட்டு இருக்காங்க. அது நடக்கவே நடக்காது. ஆப்போ ஆப்பு... பெரிய ஆப்பு கண்டிப்பா காத்திருக்கு அவருக்கு’ என்றார். இதையடுத்து சோஷியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் அனுமோகனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


