பாஜ மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி சீனிவாசன் கோவையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும். கோவை வடக்கு தொகுதியில் நான் போட்டியிடுவேனா என்பதை கட்சி முடிவு செய்யும். 234 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதிமுக கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி அரசு முழுமையாக உறுதுணையாக இருக்கும். அண்ணாமலை அவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தொகுதி சுற்றுபயண பொறுப்பாளர் பதவியை மாற்றி கொடுக்க சொல்லி இருக்கிறார், அதை பூதாகரமாக்கி விட்டார்கள். அண்ணாமலை சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என்பது எங்கள் அனைவரின் விருப்பம்.
எங்கு போட்டியிடுவோம் என்பதை டெல்லி முடிவு செய்யும். செங்கோட்டையன் மூத்த அரசியல்வாதி. காலத்தின் கொடுமை காரணமாக அவர், இப்போது கட்சி ஆரம்பித்த நடிகரோடு சேர்ந்து இருப்பது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. அதிமுகவில் இருந்த அனைவரும் இணைந்து இருக்கின்றனர். தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குத்தான் வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


