Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஜய்யை எதிர்ப்பது ஏன்? சீமான் பேட்டி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் நாம் தமிழர் கட்சி ஆலோசனை கூட்டத்தில் நேற்று கலந்து கொண்ட அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக தலைவர் நடிகர் விஜய்யுடன் கொள்கை முரண் உள்ளது. ஆதலால் எதிர்க்கின்றோம். மக்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைக்காகவும் போராட வேண்டிய அரசியல் தலைவர்கள், பேச முடியாமல் இருக்கின்றனர். இவர்களை நம்பி உள்ளவர்களின் நிலை எப்படி இருக்கும்.

தேர்தல் அரசியல் செய்பவர்கள் வியூக வகுப்பாளர்களை தேடுவார்கள். விஜய் மக்களை சந்திக்க வருவதை வரவேற்கிறேன். நாங்கள் மக்களை சந்தித்து கட்சி நடத்துகிறோம். ஆனால் கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் ரசிகர்களை நம்பி கட்சி தொடங்கினர். தமிழக மீனவர்களுக்கு உயிரும், உணர்ச்சியும், உரிமையும் வாழ்க்கையும் இருப்பதாக ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. வாக்கு இருக்கிறது என்பதற்காக கவலைப்படுகின்றனர். இவ்வாறு தெரிவித்தார்.