Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசிக்க தமிழ்நாடு எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு

சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசிக்க தமிழ்நாடு எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு, தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில், ஒன்றிய அரசால் மேற்கொள்ள உத்தேசித்துக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து,

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) கலந்தாய்வுக் கூட்டம் 8.8.2026 (சனிக்கிழமை) அன்று பிற்பகல் 3.00 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் (3-ஆம் தளம்) நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.