Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விஜய் இன்னும் சினிமா நடிகராகவே இருக்கிறார் அதிமுகவின் 6 எம்எல்ஏக்களை களவாண்ட களவாணி நீங்கள்: டிடிவி.தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு

மதுரை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கி தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். கடைத் தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போதை மருந்து விற்பனையை தடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை, விவசாயிகளை ஏமாற்றியது போல ஏமாற்றாமல் அனைத்தையும் செய்ய வேண்டும்.

அவர் சினிமா கிளைமாக்சில் பேசுவது போல பேசி கொண்டிருக்கிறார். அற்பனுக்கு வாழ்வு வந்து விட்டது என்பதற்காக அர்த்த ராத்திரியில் குடை பிடிக்க வேண்டாம். விஜய் பேச்சில் அகங்காரம், ஆணவம் மட்டும் தான் தெரிகிறது. சில பேருக்கு சில குருட்டு அதிர்ஷ்டம் வந்து விடுகிறது. சினிமா கவர்ச்சியை வைத்து தான் வந்தார். சினிமா நடிகர் இல்லை என்றால் விஜய்யை யாருக்கு தெரியும். விஜய்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட ஆதரவு அளித்த கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை.

அதனால், தான் அதிமுக உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து தன் கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அதிமுக உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு ஏதோ ஒரு வகையில் பரிசீலனை செய்துள்ளார்கள். அதைத்தான் குதிரை பேரம் என்கிறோம். இன்னொரு கட்சியில் வென்றவர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பதும் ஊழல் தான். அதிமுக உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்ததும் ஊழலில் தான் சேரும். தவெக தூய சக்தி அல்ல, தமிழ்நாட்டை அழிக்க வந்த நாசகார சக்தி. எதிர்க்கட்சிகளை சுரண்டாமல் மக்கள் பிரச்னைகளில் விஜய் கவனம் செலுத்த வேண்டும்.

திமுக, அதிமுகவை கூட்டு களவாணிகள் என கூறுவது, ஒரு முதல்வர் பேசும் பேச்சா? உண்மையில் விஜய்தான் களவாணி. ஆடு திருடன், மாடு திருடன் மாதிரி எம்எல்ஏ திருடர் நீங்கள். எம்எல்ஏ களவாணி நீங்கள். பாஜவை எதிர்ப்பதற்காக திமுக, தவெக ஒரே அணியில் இருக்க வேண்டும் என்கிறார் திருமாவளவன். அதேபோல் தான் திமுக - அதிமுக கூட்டணி அமைக்கலாம். இது அரசியல் சூழல் அடிப்படையிலானது.

உங்களை எதிர்த்து வென்ற கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைப்பதற்கு கூட்டணி அமைப்பது சரி என்றால், எந்த கூட்டணியும் சரி தான். ரீல் போட்டு ஆட்சிக்கு வந்தீர்கள். ரீல் விட்டு ஆட்சியை தொடரலாம் என நினைக்கிறீர்கள். தமிழ்நாட்டு மக்கள் எல்லோரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விஜயகாந்துடன் விஜய்யை ஒப்பிடாதீர்கள். விஜயகாந்த் வெளியில் நடிக்க மாட்டார். சினிமாவில் மட்டும் தான் நடிப்பார். இவ்வாறு கூறினார்.