விஜய்க்கு வந்து இருப்பது கருப்பு சிவப்பு நிற ஒவ்வாமை நோய்: ராஜிவ் காந்தி கடும் தாக்கு
சென்னை: விஜய்க்கு வந்து இருப்பது கருப்பு சிவப்பு நிற ஒவ்வாமை நோய் என ராஜிவ் காந்தி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று நடந்த தவெக மக்கள் சந்திப்பு கூட்டம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திமுக மாணவரணி செயலாளர் ராஜிவ் காந்தி;
துணைநிலை ஆளுநரை வைத்து
1,புதிய கல்விக் கொள்கை ஏற்பு,
2,ரேசன் கடை மூடல்,
3,CBSC பாடத் திட்டம் திணிப்பு,
4,நியமன MLAsக்கு அதிகாரம்
5,இந்தி திணிப்பு என..
பாண்டிச்சேரி முதலமைச்சரை இயங்க விடாது
பாண்டிச்சேரி அரசாங்கத்தையே நாசம் செய்கிற பாஜகவினை எதிர்த்து,மோடியை எதிர்த்து பாண்டிச்சேரியில் பாஜகவின் பெயரையே கூட உச்சரிக்காத விஜய் தான் பாஜகவை எதிர்க்கிராறாம்!!
விஜய்க்கு வந்து இருப்பது கருப்பு சிவப்பு நிற ஒவ்வாமை நோய். அதற்கு நல்ல மருத்துவரை பார்த்தால் சரியாகும் அதைவிட்டுவிட்டு அரசியல் புரட்சி,அரசியல் மாற்றம் என பேசுவது எல்லாம் ஏமாற்று தான் என்று குறிப்பிட்டுள்ளார்.