Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

விஜய்க்கு தில் இருந்தால் அதிமுக பெயரை சொல்லி தீர்ந்துபோன சக்தி என சொல்ல முடியுமா?: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால்

மதுரை: விஜய்க்கு தில் இருந்தால் அதிமுக பெயரை சொல்லி தீர்ந்துபோன சக்தி என சொல்ல முடியுமா? என மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால் விடுத்துள்ளார். மேலும் பேசிய ஆர்.பி.உதயகுமார்;

"தவெகவில் உள்ள 56 எம்எல்ஏக்கள் மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்கள்தான். ஆளே கிடைக்காமல் வந்தவர்களுக்கு எல்லாம் சீட் கொடுத்தது தவெக. மக்களின் பேராதரவில் விஜய் ஆட்சிக்கு வரவில்லை. இன்புளுயன்சர்களால் ஆட்சிக்கு வந்தவர் விஜய்.

தவெக எம்எல்ஏக்களின் பெயர்களை விஜய் சரியா சொன்னால் அரசியலை விட்டே விலகுகிறேன். விஜய்க்கு தில் இருந்தால் அதிமுக பெயரை சொல்லி தீர்ந்துபோன சக்தி என சொல்ல முடியுமா?. சனி, ஞாயிறு விடுமுறை எடுக்கும் முதலமைச்சரை இப்போதுதான் தமிழ்நாடு பார்த்துள்ளது.

முதலமைச்சர் விஜயை 6 மணிக்கு மேல் கடவுளால் கூட பார்க்க முடியாது. கரூரில் முதலமைச்சர் விஜய் நாகரிகமின்றி பேசினார். சட்டப்பேரவையில் இன்று ஏதாவது கேட்டால் நாளைதான் பதில் வருகிறது" என பேசினார்.