மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே குஞ்சாண்டியூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பத்மராஜன்(65). இவர், பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, நேற்று முதல் நபராக சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது இவரது 250வது வேட்புமனு தாக்கல் ஆகும். இதற்கு முன்பு 249 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement