Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய ராணுவத்தில் கால்நடை டாக்டர்

பணி: Veterinary Graduates. மொத்த இடங்கள்: 20. (ஆண்கள்-17, பெண்கள்-3). வயது வரம்பு: 21 லிருந்து 32க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.61,300. தகுதி: பி.வி.எஸ்சி., மற்றும் ஏஹெச் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு, கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மீரட்டில் உள்ள இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஆர்விசி- கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும். பின்னர் பணி வழங்கப்படும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணைய

தளத்தை பார்க்கவும்.

மாதிரி விண்ணப்பத்தை வெள்ளைத் தாளில் டைப் செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் கல்களை இணைத்து விரைவுத் தபால்/பதிவுத் தபால்/ சாதாரண தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Directorate General Remount Veterinary Services, (RV-1), QmG’s Branch,

Integrated Head Quarters of MoD (Army),

West Block-3, Ground Floor, Wing No:4,

R.K. Puram, New Delhi- 110 066.

விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்: 26.05.2025.