Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

24ம் தேதி தீர்ப்பு வரும்: மாம்பழம் நமக்கு தான்; அடித்து சொல்லும் ராமதாஸ்

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 3வது நாளாக நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் நேர்காணல் நடத்தினார். முன்னதாக நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய ராமதாஸ், ‘‘கூட்டணி என்றால் அது வெற்றி கூட்டணியாகத் தான் இருக்க வேண்டும். நல்ல வெற்றி கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை பொதுக்குழு எனக்கு வழங்கியுள்ளது. உங்களின் ஆணைக்கு இணங்க வெற்றிக் கூட்டணியை அமைத்து தானே ஆகனும். நான் உங்களுக்கு சொல்வது கவலைப்படுவதற்கான கூட்டணியாக இருக்காது. மாம்பழ சின்னம் யாருக்கு என்ற வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த வழக்கில் 24ம்தேதி தீர்ப்பு சொல்ல இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு பிரிவினர் தங்களுக்கு மாம்பழச் சின்னம் கிடைத்துவிட்டதாக கூறியுள்ளனர். தீர்ப்பிற்கு முன்பாகவே வானத்திற்கும், பூமிக்கும் குதித்து வருகிறார்கள். 24ம் தேதி வரை நாணயமாக கட்சி நடத்துகிற நாம் காத்திருப்போம். நிச்சயமாக நமக்குதான் கிடைக்கும் மாம்பழ சின்னம்’’ என்றார்.