Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

யுஎஸ் ஓபன் டென்னிஸ்; ஸ்வியாடெக், ஒசாகா, அல்காரஸ் 2ம் சுற்றுக்கு தகுதி: வீனஸ், வாவ்ரிங்கா வெளியேற்றம்

நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர், நியூயார்க்கில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில், 8வது ரேங்க் போலந்தின் இகா ஸ்வியாடெக், 6-2, 6-3 என்ற நேர் செட்டில் சீனாவின் வாங் சியுவை வீழ்த்தி, 2வது சுற்றுக்கு முன்னேறினார். செக்குடியரசின் கேட்ரினா சினியாகோவா 6-3, 6-2 என இத்தாலியின் எலிசபெட்டா கொச்சியாரெட்டோவையும், அமெரிக்காவின் ஆன் லி 7-5, 6-1 என குரோஷியாவின் அன்டோனியா ருசிச்சையும், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-4, 6-1 என டென்மார்க்கின் கிளாரா டௌசனையும், ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா 6-3, 6-0 என ஆஸ்திரேலியாவின் ஜூலியா கிராபரையும் வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

ஜப்பானின் நட்சத்திர வீராங்கனை நவோமி ஒசாகா 7-6 (8-6), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அனஸ்தேசியா சகாரோவாவை வீழ்த்தினார். அமெரிக்காவின் 25 வயது அமண்டா அனிசிமோவா 6-1, 6-3 என சக நாட்டைச் சேர்ந்த ஆஷ்லின் க்ரூகரை சாய்த்தார். மூத்த நட்சத்திர வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், சக நாட்டு வீராங்கனையான சோபியா கெனினிடம் 6-2, 8-6 என தோல்வியடைந்து வெளியேறினார்.

ஆடவரில் தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் களம் இறங்கிய சுவிட்சர்லாந்தின் 41 வயதான ஸ்டான் வாவ்ரிங்கா 6-7, 6-7, 0-6 என்ற செட் கணக்கில் இத்தாலியின் மட்டேயோ பெரெட்டினியிடம் தோல்வி அடைந்து விடைபெற்றார். நட்சத்திர வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் ரோமன் சஃபியுலினை வீழ்த்தி, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.