Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

திருப்போரூர்: வருவாய்த்துறையினரின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திருப்போரூர் வட்டாட்சியரும், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவருமான வெங்கட்ரமணன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் ஜீவிதா மற்றும் வருவாயத்துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும், கருணை அடிப்படையிலான பணியிடங்கள் 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை கைவிட்டு, ஏற்கனவே இருந்த 25 சதவீதம் பணியிடங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.