தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல எப்போதும் ‘‘மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார்’’: துரை வைகோ கருத்து

Advertisement

சென்னை: நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டின் சார்பில் உறுப்பினர்களாக உள்ள திமுகவை சேர்ந்த வில்சன், எம்.சண்முகம், அப்துல்லா மற்றும் கூட்டணி கட்சியான வைகோ (மதிமுக), அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் கூட்டணி கட்சியான அன்புமணி (பாமக) ஆகியோரின் பதவி காலம் ஜூன்.24ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்தவகையில் திமுக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அதில் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்து அறிவிப்பினை வெளியிட்டது. திமுக சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு இம்முறை இடம் வழங்கப்படவில்லை. திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான மதிமுகவிற்கு சீட் அளிக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மதிமுகவின் முதன்மை செயலர் துரை வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது. ‘‘நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், தமிழகத்தின் குரலாக அவர்கள் குரல் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஒலிக்கட்டும்’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

Related News