Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தின் 2ம் கட்ட பாசனத்துக்காக நீர் திறப்பு

சிவகங்கை: வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தின் 2ம் கட்ட பாசனத்துக்காக 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பால் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 45,000க்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் 4 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.