Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

துலீப் கோப்பை போட்டி: பைனலுக்குள் நுழைந்தது வைபவ் சூரியவன்ஷி அணி

பெங்களூரு: பெங்களூருவில் நடந்த துலீப் டிராபி போட்டிக்கான முதல் அரையிறுதியில் கிழக்கு மண்டலம்-மத்திய மண்டலம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மத்திய மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 266 ரன்களில் ஆல் அவுட்டானது. அதன்பிறகு விளையாடிய கிழக்கு மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 266 ரன் எடுத்தது. 2வது இன்னிங்சில் மத்திய மண்டலம் அணி 158 ரன்னுக்கு சுருண்டது. 159 ரன் இலக்குடன் களமிறங்கிய 6 விக்கெட் இழப்புக்கு 162 ரனக்ள் எடுத்து வெற்றி பெற்று துலீப் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

முதல் இன்னிங்சில் 92 ரன்கள் எடுத்த வைபவ் சூர்யவன்ஷி, 2வது இன்னிங்சில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் இஷான் கிசன் 39 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். வடக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் இடையே நடந்து வரும் இன்னொரு அரையிறுதி போட்டியில் முதலில் ஆடிய வடக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 195 ரன்களும், தெற்கு மண்டலம் 312 ரன்களும் குவித்தன. தெற்கு மண்டல அணியில் கேப்டன் திலக் வர்மா 116 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். வடக்கு மண்டலம் இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 256 ரன் எடுத்தது.

இதன் மூலம் 139 ரன் வடக்கு மண்டல அணி முன்னிலை பெற்றுள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி கிழக்கு மண்டல அணியுடன் துலீப் டிராபிக்கான இறுதி போட்டியில் மோதும்.