வாச்சாத்தி சம்பவத்தில் தொடர்பா?.. செங்கோட்டையன் விளக்கம்
சென்னை: வாச்சாத்தி சம்பவத்தில் தொடர்புபடுத்தி பேசி இருப்பது பற்றி செங்கோட்டையன் கருத்து தெரிவித்தார். இதுகுறித்து செங்கோட்டையன் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: வாச்சாத்தி சம்பவத்தில் உங்களை விமர்சனம் செய்கிறார்கள். அதுபற்றி உங்கள் கருத்து? இதற்கெல்லாம் கருத்து சொல்ல முடியாது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அப்படியென்றால் ஒவ்வொருவரும் எடுக்கும் நிலைப்பாடுகள் உங்களுக்கு தெரியும். ஒவ்வொரு கருத்தும் வேண்டுமென்றே எனக்கு, என்னுடைய வேகமான செயல்பாடுகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்கிறார்கள். எத்தனை ஆண்டுகள் கழித்து, அதாவது 92வது ஆண்டுக்கு பிறகு இப்போது சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திருநாவுக்கரசை சந்தித்தது பற்றி...? திருநாவுக்கரசர் ஒரு திருமணத்துக்கு வந்தார். அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள். அவர் பல்வேறு தொழில்கள் நடத்தியவர். அவர் கலந்து கொண்ட திருமணத்தில் கலந்து கொள்ள நானும் சென்றேன். அவரோடு பேசினேன். அரசியல் ரீதியாக அல்ல, நட்புரீதியாக பேசி இருக்கிறேன். புதியவர்கள் கட்சிக்கு வர வாய்ப்பு இருக்கிறதா? பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.