Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
DMK MK Stalin
search-icon-img
Advertisement

நிலக்கரி நிறுவனத்தில் 667காலியிடங்கள்

பணியிடங்கள் விவரம்:

1. ஜூனியர் ஓவர்மேன் ( டி மற்றும் எஸ்- கிரேடு-சி): 192 இடங்கள். சம்பளம்: ரூ.47,330. தகுதி: மைனிங் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும் அல்லது பி.இ., படித்திருக்க வேண்டும். மேலும் முதலுதவி சான்றிதழ், டிஜிஎம்எஸ் சால் அங்கீகரிக்கப்பட்ட ஓவர்மேன் சான்றிதழ், கேஸ் டெஸ்ட்டிங் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்த படிப்பானது ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையத்தில் பெற்றதாக இருக்க வேண்டும்.

2. மைனிங் சிர்தார் (டி மற்றும் எஸ், கிரேடு சி): 448 இடங்கள். சம்பளம்: ரூ.47,330. தகுதி: மைனிங் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ பட்டம் பெற்று மைனிங் சிர்தார்ஷிப் சான்றிதழ், முதலுதவி சான்றிதழ், கேஸ் டெஸ்டிங் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

3. டிரான்ஸ்லேட்டர்: 1 இடம். சம்பளம்: ரூ.41,966. தகுதி: ஆங்கிலம் மற்றும் இந்தி பாடப்பிரிவுடன் ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

4. டெக்னீசியன்: (பேத்தாலஜி): 2 இடங்கள். சம்பளம்: ரூ.47,330. தகுதி: பேத்தாலஜி பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

5. சர்வேயர்: 24 இடங்கள். சம்பளம்: ரூ.51,103. தகுதி: மைனிங் சர்வேயிங் பாடத்தில் டிப்ளமோ பட்டம் பெற்று மைனிங் சர்வேயர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் முதலுதவி சான்றிதழும், கேஸ் டெஸ்டிங் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

வயது: பொதுப் பிரிவினர்கள் 30 வயதிற்குள்ளும், ஒபிசியினர் 33 வயதிற்குள்ளும், எஸ்சி/எஸ்டியினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.1000/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் குவாண்டிடெட்டிவ் அப்டிடியூட், ரீசனிங் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளிலிருந்து 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

www.mahanadicoal.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.04.2026.