Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உத்திரமேரூர் அருகே மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் பெற்றோர் புகார்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, திருமுக்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி(38). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரளா(35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சரளா சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதில், கடந்த 25ம் தேதி இரவு சரளா திடீரென இறந்து விட்டார். இதுபற்றி அரக்கோணத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, அவர்கள் மற்றும் உறவினர்கள் பதறியடித்து கொண்டு திருமுக்கூடலுக்கு விரைந்தனர். சரளாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்நிலையில், சரளாவின் உடலில் காயங்கள் இருப்பதால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சாலவாக்கம் போலீசில் நேற்று முன்தினம் அவரது பெற்ேறார் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் விரைந்து வந்து சரளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.