நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த போட்டியில் 8வது ரேங்க் போலந்தின் இகா ஸ்வியாடெக், 6-2, 6-3 என சீனாவின் வாங் சியுவை வீழ்த்தினார். செக் குடியரசின் கேட்ரினா சினியாகோவா 6-3, 6-2 என இத்தாலியின் எலிசபெட்டா கொச்சியாரெட்டோவையும், அமெரிக்காவின் ஆன் லி 7-5, 6-1 என குரோஷியாவின் அன்டோனியா ருசிச்சையும், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-4, 6-1 என டென்மார்க்கின் கிளாரா டௌசனையும், ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா, 6-3, 6-0 என ஆஸ்திரேலியாவின் ஜூலியா கிராபரையும் வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
அமெரிக்காவின் 25 வயது அமண்டா அனிசிமோவா 6-1, 6-3 என சக நாட்டைச் சேர்ந்த ஆஷ்லின் க்ரூகரை சாய்த்தார். ஆடவரில் தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் களம் இறங்கிய சுவிட்சர்லாந்தின் 41 வயதான ஸ்டான் வாவ்ரிங்கா 6-7, 6-7, 0-6 என்ற செட் கணக்கில் இத்தாலியின் மட்டேயோ பெரெட்டினியிடம் தோல்வி அடைந்து விடைபெற்றார். ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் ரோமன் சஃபியுலினை வீழ்த்தி 2வதுசுற்றுக்குள் நுழைந்தார்.



