Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியருக்கு ஒரு நாள் சிறை, நாடு கடத்தல் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்காவின் மசாசூசெட்ஸின் வொர்செஸ்டர் பகுதியில் வசித்து வந்தவர் இந்தியரான மிதுல் படேல்(40). இவர் கடைகளில் ஆயுதம் ஏந்தி கொள்ளையடிப்பது போன்ற நாடகங்களை அரங்கேற்றும் சதியில் ஈடுபட்டுள்ளார். யூ வகை குடியேற்ற அந்தஸ்து பெறுவதற்கான விண்ணப்பத்தில் வன்முறை குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பொய்யாக கூறிக்கொள்வதற்கு அங்கிருந்த கடை ஊழியர்களுக்கு உதவுவதே இந்த திட்டமிடப்பட்ட கொள்ளையின் நோக்கம் என்று கூறப்படுகின்றது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க பெரடரல் நீதிமன்றம் மிதுலுக்கு ஒருநாள் சிறை தண்டனை மற்றும் 1000 அமெரிக்க டாலர் அபராதம் விதித்ததுடன் அவரை உடனடியாக நாடு கடத்தவும் உத்தரவிட்டுள்ளது.