Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ராணுவத்தின் போர் திறனை வலுப்படுத்த திட்டம்; அமெரிக்காவின் ஜாவெலின் ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம்

புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் போர் திறனை வலுப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் ஜாவெலின் ரக ஏவுகணைகளை வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவுக்கு ஜாவெலின் ரக கவச எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் எக்ஸ்காலிபர் எறிகுண்டுகள் ஆகிய 2 முக்கிய ராணுவ தளவாட தொகுப்புகளை விற்பனை செய்ய அமெரிக்கா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் போர் திறனை வலுப்படுத்தும் விதமாக ஜாவெலின் ரக பீரங்கி மற்றும் கவச எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க அமெரிக்காவுடன் இந்தியா நேற்று ஒப்பந்தம் செய்துள்ளது.

அமெரிக்காவின் இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த நவீன ஏவுகணைகள் எதிரிகளின் பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை அழிக்க பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஒட்டுமொத்த பாதுகாப்பு தொகுப்பின் மதிப்பு சுமார் 93 மில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் ரூ.825 கோடி). அவசர கொள்முதல் திட்டத்தின்கீழ், இந்திய ராணுவம் 104 ஜாவெலின் ஏவுகணைகளையும், 12 லாஞ்சர்களையும் வாங்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோசோர் கூறுகையில், “ஜாவெலின் ரக கவச எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தமானது, ஆழமான, திறன்மிக்க மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இரு தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது” என்றார்.