தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யுஎஸ் ஓபன் டென்னிஸ் புதிய நம்பர் 1 ரைபாகினா சாம்பியன்: பைனலில் சபலெங்காவை வீழ்த்தினார்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தான் நட்சத்திரம் எலனா ரைபாகினா கோப்பையை கைப்பற்றி அசத்தினார். பரபரப்பான இறுதிப் போட்டியில், இரு முறை நடப்பு சாம்பியனான அரினா சபலெங்காவுடன் (28 வயது, பெலாரஸ்) மோதிய ரைபாகினா (27 வயது) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

Advertisement

இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த சபலெங்கா, ரைபாகினாவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்து 7-5 என வென்று சமநிலை ஏற்படுத்தினார். எனினும், 3வது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ரைபாகினா 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக யுஎஸ் ஓபன் கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 2 மணி, 21 நிமிடத்துக்கு நீடித்தது.

யுஎஸ் ஓபனில் 2024 மற்றும் 2025ல் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்றிருந்த சபலெங்காவின் ஹாட்ரிக் முயற்சி கை கூடவில்லை. காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், ரைபாகினா விடா முயற்சியுடன் போராடி தனது 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இவர் ரஷ்யாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* ரைபாகினா 2022 விம்பிள்டனில் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். அதன் பிறகு 2026 ஆஸ்திரேலிய ஓபன் பைனலில் சபலெங்காவை வீழ்த்தி 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும், தற்போது யுஎஸ் ஓபனில் அதே சபலெங்காவை தோற்கடித்து 3வது பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

* மகளிர் ஒறையர் பிரிவு தரவரிசையில் 99 வாரமாக முதலிடம் வகித்து வந்த சபலெங்கா, யுஎஸ் ஓபன் பைனலுக்கு முன்பாகவே ரைபாகினாவிடம் நம்பர் 1 அந்தஸ்தை பறிகொடுத்த நிலையில் மும்முறை சாம்பியனாகி ஹாட்ரிக் சாதனை படைக்கும் வாய்ப்பையும் இழந்தார். இன்று வெளியாகும் டபுள்யுடிஏ தரவரிசை பட்டியலில் ரைபாகினா முதலிடம் பிடித்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

* தொடர்ச்சியாக 100 வாரங்களுக்கு நம்பர் 1ல் நீடித்த 6வது வீராங்கனை என்ற பெருமையை சபலெங்கா நூலிழையில் நழுவவிட்டார்.

* ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் பட்டங்களை தலா 1 முறை வென்றுள்ள ரைபாகினா, 2027 பிரெஞ்ச் ஓபனிலும் பட்டம் வென்றால் ‘கேரியர் ஸ்லாம்’ சாதனை படைக்கலாம்.

Advertisement

Related News