Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரானுடனான பேச்சுவார்த்தை; நம்பிக்கையை இழந்து வருவதாக டிரம்ப் பேச்சு

வாஷிங்டன்: ஈரானுடனான பேச்சுவார்த்தையில் நம்பிக்கையை இழந்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார். ஹோர்முஸ் நீரிணை மீதான உரிமையை ஒருபோதும் விட்டு கொடுக்க முடியாது என ஈரான் திட்டவட்டமாக கூறி உள்ளது.

அமெரிக்க அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் உண்மையான நோக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்பதில் தனக்குத் தொடர்ந்து சந்தேகம் நிலவுவதாக கூறி உள்ளார். அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையிலும், ஈரான் தனது வாக்குறுதிகளைத் தொடர்ந்து மீறி வருவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

ஈரான் தரப்பு உண்மைகளைத் தவறாகச் சித்தரிக்கிறது என்று கூறிய டிரம்ப், அவர்கள் எப்போதும் பேச்சுவார்த்தை நடத்தவே விரும்புகிறார்கள், ஆனால் அதே நேரம் அவர்கள் அடிக்கடி தங்கள் வாக்குறுதிகளை மீறுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, மறுபக்கம் தாக்குதல் என அவர்களின் நடவடிக்கை இருக்கிறது என்றும் ஈரான் மீது குற்றம்சாட்டி உள்ளார் டிரம்ப். ஈரான் அதிகாரிகள் தொடர்ந்து பொய் சொல்வதாகவும், அளித்த வாக்குறுதிகளை மீறுவதால் தான், தனக்கு ஈரானுடனான பேச்சுவார்த்தையில் நம்பிக்கை குறைந்து வருவதாக டிரம்ப் விளக்கம் அளித்து உள்ளார்.