நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நாளை தொடங்குகிறது. இதில் ஆடவரில் நடப்பு சாம்பியன் அல்காரஸ், ஜோகோவிச், 2வது ரேங்க் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். வலது முழங்காலில் காயம் காரணமாக நம்பர் 1 ஜானிக் சின்னர் பங்கேற்கவில்லை. மகளிர் ஒற்றையரில் நடப்பு சாம்பியனும் நம்பர் 1 வீராங்கனையுமான அரினா சபலென்கா, கஜகஸ்தானின் ரைபகினா, கோகோ காப், இகா ஸ்வியாடெக், ஜெசிகா பெகுலா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.46.2 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.
+
Advertisement



