Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அமெரிக்க இடைக்கால தேர்தல் அசத்திய இந்திய வம்சாவளிகள்: ஜனநாயக கட்சியிலிருந்து வென்றனர்

வாஷிங்டன்: அமெரிக்க இடைக்கால தேர்தலில் இந்திய வம்சாவளிகள் வலுவான பங்களிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளி எம்பிக்களான எமி போரா, ரோ கண்ணா, சுஹாஸ் சுப்பிரமணியம், பிரமிளா ஜெயபால் ஆகியோர் பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பியா தண்டியா முதல் முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுழைந்துள்ளார். கலிபோர்னியாவின் 3வது நாடாளுமன்ற தொகுதியிலிருந்து, குடியரசு கட்சியின் ராப் டக்கரைத் தோற்கடித்து, எமி பேரா (61) 8வது முறையாக பிரதிநிதிகள் சபை எம்பியாகி உள்ளார். மருத்துவராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இவர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றிய இந்திய-அமெரிக்கர் ஆவார்.

இதே போல, கலிபோர்னியாவின் 17-வது நாடாளுமன்ற தொகுதியிலிருந்து ரோ கண்ணா (50) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அவர் தனது வரும் ஜனவரி மாதம் 6வது பதவிக்காலத்தை தொடங்கவுள்ளார். விர்ஜீனியாவின் 10வது நாடாளுமன்ற தொகுதியிலிருந்து சுஹாஸ் சுப்ரமணியம் (40) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் குடியரசுக் கட்சியின் டேவ் பெக்வித்தை எதிர்த்துப் போட்டியிட்டு, 61 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர், இதற்கு முன்பு முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிடம் ஆலோசகராகப் பணியாற்றியவர்.

வாஷிங்டனின் 7-வது நாடாளுமன்ற தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெயபால், பிரதிநிதிகள் சபையில் தனது ஆறாவது பதவிக்காலத்தை உறுதி செய்துள்ளார். கடந்த மாதம், இந்தியாவின் வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறை குறித்து அவர் தெரிவித்த கருத்து, அமெரிக்காவிற்கான இந்தியத் தூதரின் பகிரங்க கண்டனத்திற்கு உள்ளானது.

39 வயதான பியா தாண்டியா, புளோரிடாவின் 22வது நாடாளுமன்ற தொகுதியில் குடியரசுக் கட்சியின் கேசி அஸ்காரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். புளோரிடா மாகாணத்தின் வரலாற்றிலேயே அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி உறுப்பினர். மேலும், அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் பிரமிளா ஜெயபாலுக்கு அடுத்தபடியாக பிரதிநிதிகள் சபைக்குள் நுழையும் 2வது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேரிலாந்தில், ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி துணை ஆளுநர் அருணா மில்லர் (ஜனநாயக கட்சி) மீண்டும் தனது பதவியை தக்க வைத்துள்ளார்.