Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

போர் அரசியல், இனப்படுகொலைக்கு எதிராகவே அமெரிக்க தேர்தல் முடிவு அமைந்துள்ளது: ஜவாஹிருல்லா கருத்து

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று வெளியிட்ட அறிக்கை:அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருப்பது, அதிபர் டொனால்ட் ட்ரம்பின் போர் வெறி, மதவாத அரசியல், குடியேற்ற எதிர்ப்பு, சமூகப் பிளவுகளை தூண்டும் அணுகுமுறை, மக்கள் நலன்களைப் புறக்கணிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிரான அதிருப்தி இந்தத் தேர்தலில் வெளிப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலின் வரலாற்றுச் சிறப்பு, மிச்சிகனில் டாக்டர் அப்துல் எல்-சயீத் அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிமாக உருவெடுத்திருப்பதாகும். நியூஜெர்சியில் டாக்டர் ஆதம் ஹமாவி வெற்றி பெற்றிருப்பதும், ரஷிதா தலீப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் பாலஸ்தீன ஆதரவு குரல்களுக்கு நாடாளுமன்றத்தில் கூடுதல் பிரதிநிதித்துவத்தை வழங்குகின்றன. போர் அரசியலுக்கும், இனப்படுகொலைக்கும் எதிராகவும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளுக்காகவும் ஜனநாயக வழியில் எழும் குரல்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் கூடுதல் முக்கியத்துவத்தை அளித்துள்ளன.