Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உபியை உலுக்கும் சீரியல் கில்லர் புடவையால் கழுத்தை நெரித்து 13 மாதங்களில் 9 பெண்கள் கொலை: 300 போலீஸ், 14 குழுக்கள் அமைத்தும் கண்டுபிடிக்க முடியாமல் திணறல்

பரேலி: உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியின் கிராமப் பகுதியில் கடந்த 13 மாதங்களில் ஒரே வயதுடைய ஒன்பது பெண்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான முறையில் கொலை செய்யப்பட்டனர். குறிப்பாக கொல்லப்பட்ட பெண்கள் அனைவரும் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டனர். அவர்கள் கட்டியிருந்த சேலையால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டு இருந்தனர். பரேலியில் உள்ள ஷாஹி, ஷீஷ்கர் மற்றும் ஷெர்கர் காவல் நிலையப் பகுதிகளில் கடந்த ஆண்டு 40முதல்65 வயதுக்குட்பட்ட 8 பெண்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பெண்களின் சடலங்கள் அங்குள்ள கரும்பு வயல்களில் ஆடைகள் களைந்த நிலையில் காணப்பட்டன, ஆனால் பாலியல் வன்கொடுமைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அடுத்தடுத்து மூன்று கொலைகளும், ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் தலா ஒரு கொலையும், நவம்பரில் இரண்டு கொலைகளும் நடந்தன. இதை தொடாந்து 300 போலீஸ்காரர்களைக் கொண்ட கூடுதல் படை, சீருடை அணிந்த மற்றும் சாதாரண உடையில் அதிகாரிகள் 14 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

ஆனால் கொலைகாரனை பிடிக்க முடியவில்லை என்றாலும், உடனடி கொலை எதுவும் நடக்கவில்லை. ஆனால் கடந்த ஜூலை மாதம்2ம் தேதி ஷெர்கரில் உள்ள புஜியா ஜாகிர் கிராமத்தில் வசித்த 45 வயதான அனிதா, பதேகஞ்சின் கிர்கா கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்ற போது கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இது உபி போலீசாருக்கு பெரிய தலைவலி ஏற்படுத்தியது. இதையடுத்து மூன்று ஓவியங்களை தற்போது போலீசார் வெளியிட்டு சீரியல் கில்லரை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.